என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
குவைத் தீ விபத்து: அடையாளம் காண்பதற்கு டி.என்.ஏ. பரிசோதனை
ByMaalaimalar13 Jun 2024 11:09 AM IST
- குவைத் தீ விபத்தில் மரணம் அடைந்தவர்கள் பலர் கரிக்கட்டையாகி விட்டனர்.
- உடல்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.
குவைத் தீ விபத்தில் மரணம் அடைந்தவர்கள் பலர் கரிக்கட்டையாகி விட்டனர். அவர்களது உடல்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.
இதனால் இறந்த உடல்களை அடையாளம் காண்பதற்கு குவைத் அரசு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் மூலம் இறந்தவர்கள் உடல்களை விரைந்து அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குவைத்துக்கு விமானப்படை விமானம் விரைகிறது
குவைத் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தை குவைத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
Next Story
×
X