என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயில் மில் குடோனில் பயங்கர தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்
    X

    ஆயில் மில் குடோனில் பயங்கர தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்

    • ஆறு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • பல லட்சம் மதிப்பிலான எண்ணெய் வித்து பொருள்கள் எரிந்து நாசமானது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளி வாசல் தெருவில் வசிப்பவர் சாகுல் (வயது 40).

    இவர் அதே பகுதியில் ஆயில் மில் நடத்தி வருகிறார். ஆயில் மில் மேல் தளத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் எண்ணெய் தயாரிப்பதற்கான அட்டைப்பெட்டிகள், எள் மூட்டைகள், கடலை பருப்பு மூட்டைகள் உள்ளிட்ட ஆயில் பொருட்களை வைத்துள்ளார்.

    வழக்கம் போல் நேற்று இரவு வேலைகளை முடித்துவிட்டு ஆயில் மில்லை வழக்கம் போல் சாகுல் பூட்டிவிட்டு சென்றார்.

    இந்த மில்லில் இருந்து நள்ளிரவில் பொருட்கள் வைத்திருத்த தளத்தில் இருந்து புகையுடன் தீ பற்றியது. பின்னர் தீ மளமளவென பரவி ஆயில் மில் மேல் தளத்தில் உள்ள குடோன் முழுவதும் பரவியது இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆலங்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரமாக போராடினர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து இது ஆயில் குடுடோன் என்பதால் இதற்கு என பிரத்தியேகமாக உள்ள தீயணைப்பு வாகனம் புதுக்கோட்டையில் இருந்து வரவழைக்கப்பட்டது.

    அவர்கள் ஆறு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள கட்டிடங்களிலும் தண்ணீர் பீச்சியடித்து தீ பரவாமல் தடுத்தனர்.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து பொருள்கள் எரிந்து நாசமானது. நள்ளிரவில் நடந்த இந்த தீ விபத்தால் ஆலங்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×