search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எருமப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
    X

    எருமப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

    • 560 ஜல்லிகட்டு காளைகள் களமிறங்கின.
    • வாடி வாசலில் இருந்து வெளியேறிய காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர்.

    சேலம்:

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பொன்னேரி கிராமத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் பொன்னுசாமி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த போட்டியில் 560 ஜல்லிகட்டு காளைகள் களமிறங்கின. 250 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். வாடி வாசல் வழியாக பாரம்பரிய முறைப்படி காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    வாடி வாசலில் இருந்து வெளியேறிய காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மடக்கி பிடித்து அடக்கினர். சில காளைகள் துள்ளி குதித்து அவர்களிடம் இருந்து தப்பி ஓடியது.


    தொடர்ந்து சீறிபாயும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகிறார்கள். வெற்றி பெற்ற வீரர்களையும், காளைகளையும் பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகமாக ஆரவாரம் செய்து வருகிறார்கள். இந்த ஜல்லிக்கட்டில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி கிசிச்சை அளிக்கப்பட்டது .

    மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகள் தகுதி சான்றுகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வீரர்கள் மற்றும் காளைகள் காயம் அடைந்தால் சிகிச்சை அளிக்க வசதியாக 5 மருத்துவ குழுவினர் அடங்கிய 25 டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். 3 ஆம்புலன்ஸ்கள், 3 நடமாடும் சிகிச்சை ஊர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×