என் மலர்
உள்ளூர் செய்திகள்
காதலன் வீட்டில் நர்சு தற்கொலை- போலீசார் விசாரணை
- ரேகா கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் நர்சாக வேலை செய்து வந்தார்.
- பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வரும் காதலனின் வீட்டுக்கு ரேகா நேரில் சென்றார்.
சென்னை:
கள்ளக்குறிச்சியை அடுத்த செய்யூரைச் சேர்ந்தவர் ரேகா. 29 வயதான அவர் அதே பகுதியில் உள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் நர்சாக வேலை செய்து வந்தார்.
அங்கு பணிபுரியும் வாலிபர் ஒருவரை ரேகா காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் ரேகாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.
திருமண ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளன. இது ரேகாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் அவர் இருந்து வந்தார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் வசித்து வரும் காதலனை நேரில் சந்தித்து முறையிட அவர் முடிவு செய்தார். இதன்படி செய்யூரில் இருந்து புறப்பட்டு ரேகா சென்னை வந்தார்.
சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் பகுதியில் வசித்து வரும் காதலனின் வீட்டுக்கு ரேகா நேரில் சென்றார். அப்போது காதலனிடம் தனக்கு மாப்பிள்ளை பார்த்து வருவது தொடர்பாக கூறி அழுத அவர் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காதலன் வெளியில் சென்றிருந்த நேரத்தில் ரேகா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீடு திரும்பிய காதலன் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சாஸ்திரி நகர் போலீசார் விரைந்து சென்று ரேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.