என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜவுளி வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி-கூட்டாளிகள் கைது
- ரமேஷ் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
- வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார்.
ராயபுரம்:
பழைய வண்ணாரப் பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி கல்லறை சுரேஷ் என்பவர் அடியாட்களுடன் சென்று மாமூல் கேட்டு மிரட்டினார்.
வியாபாரி ரமேஷ் மாமூல் தர மறுத்ததால் அங்கிருந்த வாடிக்கையாளர்களின் முன்னிலையிலேயே ரவுடி கல்லறை சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆபாச வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ரவுடி கல்லறை சுரேஷ் கூட்டாளிகளுடன் வந்து மாமூல் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கல்லறை சுரேஷ், அவனது கூட்டாளிகள் ஆதம்,பெருமாள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.