search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் மலேசியா விமானம் திடீர் ரத்து பயணிகள் வாக்குவாதம்
    X

    சென்னையில் மலேசியா விமானம் திடீர் ரத்து பயணிகள் வாக்குவாதம்

    • கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எந்திர கோளாறால் வரவில்லை.
    • விமானம் ரத்து செய்யப்பட்டதால் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று விமான நிறுவனத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று இரவு 1.40 மணிக்கு பயணிகள் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும். இந்த விமானத்தில் பயணம் செய்ய சுமார் 320 பயணிகள் பரிசோதனைகள் அனைத்தும் முடித்து தயார் நிலையில் இருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு விமானம் புறப்படவில்லை. விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஏற்படும் என்று மட்டும் விமான நிறுவனம் அறிவித்தது. ஆனால் இன்று காலை 7 மணி வரை விமானம் வராததால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் விமான நிறுவனத்திடம் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது, கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எந்திர கோளாறால் வரவில்லை. இதனால் அந்த விமானம் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தனர். வழக்கமாக இந்த விமானம் சென்னைக்கு இரவு 12.50 மணிக்கு வரவேண்டும். பின்னர் இதே விமானம் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு 1.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். விமானம் ரத்து செய்யப்பட்டதால் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று விமான நிறுவனத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பயணிகள் மாற்று விமானத்தில் செல்ல விமான நிறுவனம் ஏற்பாடுகள் செய்தது.

    Next Story
    ×