என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து
BySuresh K Jangir22 Feb 2023 1:51 PM IST
- ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ உணவகத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
- ஓட்டலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ என்ற வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒரு உணவகத்தில் இன்று மதியம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உணவகம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதுபற்றி உடனடியாக மயிலாப்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்தனர். அவர்கள் ஓட்டலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
X