என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
திருநங்கைகளுக்கான அழகி போட்டி- மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு
BySuresh K Jangir2 May 2023 3:47 PM IST
- கூத்தாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் அழகிப்போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
- 2-வது இடத்தை சென்னை திஷாவும், 3-வது இடத்தை சேலம் சாதனாவும் பிடித்தனர்.
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூத்தாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் அழகிப்போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று விழுப்புரத்தில் அழகி போட்டி நடைபெற்றது. ஆனால் திடீர் மழை காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டு இன்று நடைபெற்றது. இதில் மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த நிரஞ்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கீரிடம் சூட்டப்பட்டது.
2-வது இடத்தை சென்னை திஷாவும், 3-வது இடத்தை சேலம் சாதனாவும் பிடித்தனர். அழகிபோட்டியை காண ஏராளமான வெளிநாட்டினர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் குவிந்து இருந்தனர்.
Next Story
×
X