என் மலர்
உள்ளூர் செய்திகள்
சமூகவலைதளத்தில் ரீல்ஸ் பதிவிட பெற்ற குழந்தையை விற்று நவீன செல்போன் வாங்கிய தம்பதி
- செல்போனுக்காக தன்னுடைய ஆண் குழந்தையை விற்று அந்தப் பணத்தின் மூலம் ஐபோனை வாங்கியுள்ளனர்.
- வழக்கில் குழந்தை கடத்தல் மோசடி ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்தேவ். இவருடைய மனைவி சதி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும், 7 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் செல்போன் மூலம் வீடியோக்களைப் பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது வழக்கம். இதற்காக விலை உயர்ந்த வகையிலான ஐபோனை வாங்க அவர்கள் நினைத்தனர். அதற்கான பணம் இல்லை. செல்போனுக்காக தன்னுடைய ஆண் குழந்தையை விற்று அந்தப் பணத்தின் மூலம் ஐபோனை வாங்கியுள்ளனர்.
அவர்களது வீட்டில் குழந்தையைக் காணாது அக்கம்பக்கதினர் விசாரிக்கையில், அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. உடனடியாக இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தையின் தாய், குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டார். குழந்தையை விற்ற பணத்தில் ஐபோன் வாங்கியதுடன், வீடியோ காட்சிகள் எடுப்பதற்காகவும் செலவுகள் செய்தோம் என அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தையை போலீசார் மீட்டனர்.இந்த விவகாரம் தொடர்பாக ஜெயதேவ்-சதியை போலீசார் கைது செய்தனர்.
குழந்தையை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து மேற்குவங்கம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். அந்தப் பணத்தில் ஐபோனை வாங்கியதுடன், வீடியோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இந்த வழக்கில் குழந்தை கடத்தல் மோசடி ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.