search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவையில் சொத்துக்களை பாதுகாக்க கோரி பாரீசில் பிரெஞ்சு குடியுரிமை மக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    புதுவையில் சொத்துக்களை பாதுகாக்க கோரி பாரீசில் பிரெஞ்சு குடியுரிமை மக்கள் ஆர்ப்பாட்டம்

    • புதுவையில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் சமூக விரோதிகள் சிலர் திட்டமிடுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது.
    • பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் புதுவையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் மற்றும் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரெஞ்சு-இந்திய குடியுரிமை பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் பிரான்ஸ் நாட்டில் தங்கி வேலை செய்து வருபவர்கள் புதுவையில் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கி அதற்கு பொறுப்பாளர்களை நியமிப்பது வழக்கம்.

    இதற்கிடையே புதுவையில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் சமூக விரோதிகள் சிலர் திட்டமிடுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தியால்பேட்டையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஒருவரை மிரட்டி சிலர் பணம் கேட்டனர். இதுகுறித்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் புதுவையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் மற்றும் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து புதுவைக்கான பிரெஞ்சு தூதர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களை பாதுகாக்கவும், அவர்கள் அமைதியாக வாழ வழி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    இந்த நிலையில் புதுவையில் சொத்துக்களை மிரட்டி அபகரிப்பதை கண்டித்து பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இரட்டை குடியுரிமை பெற்ற மக்கள் பாரீஸ் மியட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பாலா சீனிவாசன், ஜனார்த்தினி, முருக பத்மநாபன், தெய்வப்பிரகாசம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    புதுவையில் சொத்துக்களை அபகரிப்பவர்கள் மீதும், குடியுரிமை பெற்றவர்களை மிரட்டி பணம் பறிக்க நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து பிரான்ஸ் அரசு இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து பிரெஞ்சு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் தூதரக அதிகாரிகளிடம் புகார் மனுவையும் அளித்தனர்.

    Next Story
    ×