என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தண்டையார்பேட்டையில் தடை செய்யப்பட்ட கேரளா ஒரு நம்பர் லாட்டரி விற்ற 4 பேர் கைது தண்டையார்பேட்டையில் தடை செய்யப்பட்ட கேரளா ஒரு நம்பர் லாட்டரி விற்ற 4 பேர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/11/04/1976729-arrest1.webp)
X
தண்டையார்பேட்டையில் தடை செய்யப்பட்ட கேரளா ஒரு நம்பர் லாட்டரி விற்ற 4 பேர் கைது
By
Maalaimalar4 Nov 2023 12:31 PM IST
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கேரளா ஒரு நம்பர் லாட்டரி தண்டையார்பேட்டை பகுதியில் விற்பனை செய்வதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் சேர்ந்து செல்போனில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி ரகசியமாக மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
ராயபுரம்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா ஒரு நம்பர் லாட்டரி தண்டையார்பேட்டை பகுதியில் விற்பனை செய்வதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் புது வைத்தியநாதன் தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் சேர்ந்து செல்போனில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி ரகசியமாக மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இது தொடர்பாக கொருக்குப்பேட்டை அண்ணா நகரைச் சேர்ந்த ரத்தினகுமார் (வயது 46) கொடுங்கையூர் தென்றல் நகரை சேர்ந்த வேலு (36). எழில் நகரைச் சேர்ந்த காந்தி குமார் (39) தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்த முனுசாமி (38) ஆட்டோ டிரைவர்கள் ஆகிய 4 பேரை இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.
Next Story
×
X