search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூரில் ஒரு ஆண்டாக மூடிக்கிடக்கும் ரெயில்வேகேட்- நடவடிக்கை எடுக்க ரெயில்வே அதிகாரியிடம் மனு
    X

    திருவொற்றியூரில் ஒரு ஆண்டாக மூடிக்கிடக்கும் ரெயில்வேகேட்- நடவடிக்கை எடுக்க ரெயில்வே அதிகாரியிடம் மனு

    • திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணி நடைபெற இருப்பதாக கூறி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மக்கள் கடந்து செல்லக்கூடிய ரெயில்வே கேட்டை அதிகாரிகள் தற்காலிகமாக மூடி வைத்தனர்.

    ஆனால் இதுவரை ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் ரெயில்வே கேட்டை மூடி வைத்திருப்பதால் பொது மக்கள் அப்பகுதி வழியாக செல்லமுடியாமல் கடும் சிரமம் அடைந்து உள்ளனர்.

    முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் தினமும் 5 கி.மீ தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து தொடங்கவேண்டும். சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும் வரை மூடப்பட்ட ரெயில்வே கேட்டை மக்களின் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக 7-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் டாக்டர் கே. கார்த்திக் மற்றும் கிராமமக்கள் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த ரெயில்வே அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    Next Story
    ×