search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகண்டை கூட்டு ரோடு அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 1.68 லட்சம் பணம் பறிமுதல்
    X

    உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற பணத்தை வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்த வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்த போது எடுத்த படம்.

    பகண்டை கூட்டு ரோடு அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 1.68 லட்சம் பணம் பறிமுதல்

    • சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லோடு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    • உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.

    சங்கராபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் யாரும் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு ரோட்டில் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லோடு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உளுந்தூர்பேட்டை தாலுக்கா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த செவத்தான்(51), மற்றும் அவரது உறவினரான டிரைவர் சின்னப்பன் (36) என்பதும், அவர்கள் இருவரும் ஆடு வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் 28 ஆடுகளை அத்தியூர் வார சந்தையில் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் அப்பணத்தை பறிமுதல் செய்து வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×