search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூர்: ரெயில்வே சுரங்கப்பாதை பணியை உடனடியாக தொடங்க அ.தி.மு.க. கவுன்சிலர் கோரிக்கை
    X

    திருவொற்றியூர்: ரெயில்வே சுரங்கப்பாதை பணியை உடனடியாக தொடங்க அ.தி.மு.க. கவுன்சிலர் கோரிக்கை

    • அண்ணாமலை நகர் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளுக்காக வீடுகள் அகற்றப்பட்டன.
    • அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் மூடப்பட்டு நீண்ட நாள்கள் ஆகிவிட்டன.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டல கூட்டம் தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் கே. கார்த்திக் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து செய்யப்படும் பணிகள் எனது அனுமதி கடிதம் இல்லாமலே 7-வது வார்டில் டெண்டர் வந்து உள்ளது. சார்லஸ் நகரில், 7 வது குறுக்கு தெரு என்ற இடமே இல்லை. இல்லாத இடத்திற்கு சாலை அமைப்பதாக கூறுகின்றனர்.

    எனவே அந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். பக்கிங்காம் கால்வாய் சாலைகள் மிக பழுதாகி விட்டது. மேற்கு பகுதி மக்களுக்கு அது முக்கிய சாலையாக உள்ளது. அதை உடனே சரி செய்து தர வேண்டும். கிளாஸ் பேக்டரி சாலையில் ரப்பீஸ் போடுகின்றனர். டெண்டர் விட்டு அந்த பணியை நீங்கள் செய்திருக்கலாம்.

    இருப்பினும் ரப்பீஸ் போடுவதற்கு நன்றி. அண்ணாமலை நகர் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளுக்காக வீடுகள் அகற்றப்பட்டன. ஆனால் அவர்களுக்கு இன்னும் மாற்று வீடுகள் வழங்கப்படவில்லை.

    பல்வேறு பகுதியிலுள்ள மழை நீர் அண்ணா நகர் பகுதியில் வந்து சேருகின்றது. அதனால் அப்பகுதி மக்கள் சிரமத்தில் உள்ளனர். அதற்கு மாற்று வழி செய்ய வேண்டும். அந்த பகுதியில் அனைத்து விளக்குகளும் எடுக்கப்பட்டதால் இருளடைந்து உள்ளது. இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. கார்கில் நகர், ராஜாஜி நகரிலும் தெரு விளக்குகள் இல்லை உடனே சரி செய்ய வேண்டும்.

    வந்தே பாரத் திட்டத்தில் ரெயில் வேகங்கள் அதிகரிக்கப் படுவதால் ரெயில்வே கேட்டுகளே இல்லாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்படுகின்றன. அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் மூடப்பட்டு நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் பணிகள் ஏதும் நடைபெற வில்லை.

    அப்பகுதியில் மெட்ரோ வாட்டர் பைப்லைன் செல்கிறது. அதை அகற்றி கொடுத்தால் பணிகள் நடக்கும். ஆனால் அது அகற்றப்படவில்லை. திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஊழியர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இது நியாயமற்றது. காவல் நிலையத்தில் வழக்கு போடும் அளவிற்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள். இது குறித்து நான் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன். வழக்கு போட காரணமாக இருந்த அதிகாரிகள் கண்டிப்பாக இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×