search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எ.வ.வேலு நடத்தி முடித்த கழக கல்யாணம்..!
    X

    எ.வ.வேலு நடத்தி முடித்த கழக கல்யாணம்..!

    • விருந்து கொடுப்பது எ.வ.வேலுவுக்கு புதிதல்ல.
    • தம்பியும் சீக்கிரம் தீவிர அரசியலுக்கு வரும் என்று உடன் பிறப்புகள் உற்சாகமாக பேசிக் கொண்டார்கள்.

    கட்சி கூட்டத்தை கழக கல்யாணம் போல் நடத்திவிட்டார். அமைச்சர் எ.வ வேலு என்பதுதான் இப்போது தி.மு.க.வில் நடக்கும் பேச்சு தி.மு.க. பாக பொறுப்பாளர்கள் கூட்டத்தை வடக்கு மண்டலத்தில் அமைச்சர் எ.வ.வேலு பொறுப்பு ஏற்று திருவண்ணாமலையில் நடத்தினார்.

    இதுதான் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது மொத்தம் 14000 நிர்வாகிகள்.... அவர்களுக்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் தான் அடேயப்பா என்று எல்லோரையும் பிரமிக்க வைத்தது. பாக பொறுப்பாளர் மாநாட்டுக்கு சற்றும் குறையாத வகையில் நளபாக பொறுப்பாளர் மாநாடு என்று சொல்லும் வகையில் உணவு கூடமும் பிரமிக்க வைத்தது மாவட்டம், தொகுதி, பாகம் என்று தனித்தனியாக விருந்து கொடுக்கப்பட்டது. முன்னதாக அனைவருக்கும் தாம்பூல பை கொடுக்கப்பட்டது. அதில் குடி தண்ணீர் பாட்டில், பென், நோட்டு, ஸ்நாக்ஸ் இருந்தது.

    சாப்பாட்டில் மட்டன் பிரியாணி முதல் வகை வகையான சைவ உணவு வரை இடம் பெற்று இருந்தது. எல்லாமே 'அன்லிமிடெட்' தான்.

    இந்த மாதிரி விருந்து கொடுப்பது எ.வ.வேலுவுக்கு புதிதல்ல. அவ்வப்போது கட்சிக்காரர்களுக்கு சோறு போட்டு வளர்த்து வைக்கிறார் என்று நகைக்சுவையாக சொல்வதுண்டு.

    இந்த கல்யாண வைபோகத்தில் ஹைலைட் எ.வ.வேலு மகன் கம்பன் தான். பம்பரமாக சுழன்று கொண்டிருந்த அவர் கட்சியினர் பார்வையை அடிக்கடி கவர்ந்தார்.

    தம்பியும் சீக்கிரம் தீவிர அரசியலுக்கு வரும் என்று உடன் பிறப்புகள் உற்சாகமாக பேசிக் கொண்டார்கள்.

    Next Story
    ×