என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது
- பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக விக்னேஷ் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரை கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள நம்மோன்காடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது21). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மலைதாங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் இருவரும் திருப்பூரில் வேலை பார்த்து வந்ததால் நட்பாக பழகி வந்தனர். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் பல இடங்களுக்கு சென்று சுற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விக்னேஷ், அந்த பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணை விக்னேஷ் கோட்டப்பட்டி அருகேயுள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் விக்னேஷ் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த பெண்ணிடம் சரியாக பேசவில்லை. இது பற்றி அந்த பெண் கேட்டபோது உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று விக்னேஷ் கூறியுள்ளார்.
இதனால் அந்த பெண் வீட்டில் கதறி அழுதார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரை கைது செய்தனர்.