என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சென்னை புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 20-ந் தேதி விமானங்களை இயக்கி சோதனை ஓட்டம் சென்னை புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 20-ந் தேதி விமானங்களை இயக்கி சோதனை ஓட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/13/1865108-10.webp)
சென்னை புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 20-ந் தேதி விமானங்களை இயக்கி சோதனை ஓட்டம்
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- புதிய ஒருங்கிணைந்த முனையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பயணிகளிடையே அதிக எரிபார்ப்பு எழுந்து உள்ளது.
- அனைத்து விதமான சோதனைகளையும் எளிதாக முடித்துவிட்டு எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் விமானத்திற்கு செல்லலாம்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையம் ரூ.1,260 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய முனையத்தை பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி திறந்து வைத்தார். இதில் ஆண்டுக்கு 3½ கோடி பயணிகளை கையாளும் வகையில் அமைக்கபட்டுள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோரை சோதனை செய்ய தற்போது சர்வதேச புறப்பாடு முனையத்தில் 22 கவுண்டர்களும், வருகை முனையத்தில் 34 கவுண்டர்களும் உள்ளன.
ஆனால் புதிதாக திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தில் 108 கவுண்டர்களும் இருக்கிறது. வருகை பகுதியில் 54 கவுண்டர்களும், புறப்பாட்டு முனையத்தில் 54 கவுண்டர்கள் உள்ளன. இது அதிகமாக பயணிகள் வரும் பொழுது கையாள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பயணிகளிடையே அதிக எரிபார்ப்பு எழுந்து உள்ளது. இதற்கான சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதால் பயன்பாட்டுக்கு வருவது தாமதமாவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் வருகிற 20-ந்தேதி புதிய ஒருங்கிணைத்த முனையத்தில் சோதனை முறையில் விமானங்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அன்று முதல் வெளிநாட்டு விமானங்கள் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே விரைவில் புதிய முனையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறும்போது, இந்த புதிய முனையம் திறக்கப்பட்டால் பயணிகள் விமான நிலையத்தில் உள்ள சோதனை மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அனைத்து விதமான சோதனைகளையும் எளிதாக முடித்துவிட்டு எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் விமானத்திற்கு செல்லலாம். இந்த சோதனை ஓட்டம் சில நாட்களுக்கு தொடரும். அதன் பின்பு முழு வீச்சில் செயல்படும் என்றனர்.