என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சம்பள உயர்வு கோரி.... திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி தூய்மை பணியாளர்கள் `திடீர்' போராட்டம்
ByMaalaimalar26 Dec 2024 12:37 PM IST
- 14 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.
- நிர்ணயித்த கூலியை வழங்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனையில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழி லாளர்களுக்கு தினக்கூலியாக மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு தொகை வழங்க அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிற தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ.725 வழங்க வேண்டும். ஆனால் ரூ.534 மட்டுமே வழங்கப்படுவதாக தெரிகிறது.
இதனால் நிர்ணயித்த கூலியை வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும், 14 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் இன்று காலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் -காவலாளிகள் உட்பட பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
X