என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக த.வெ.க. மாவட்ட செயலாளர் உள்பட 15 பேர் மீது வழக்கு

- மாவட்ட செயலாளர் நிரஞ்சனுக்கு 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் வரவேற்பளிக்க திரண்டு இருந்தனர்.
- டிரைவர் சிவச்சந்திரன் உட்பட 15 பேர் மீது மயிலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
மயிலம்:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அனைத்து மாவட்டங்களிலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக நிரஞ்சனை த.வெ.க தலைவர் விஜய் தேர்வு செய்துள்ளார்.
நேற்று காலை 11 மணி அளவில் மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டிற்கு வருகை தந்த கட்சியின் மாவட்ட செயலாளர் நிரஞ்சனுக்கு 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் வரவேற்பளிக்க திரண்டு இருந்தனர்.
இந்நிலையில் போலீசாரிடம் அனுமதி பெறாமல் பொது இடத்தில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு கிரேன், பொக்லின், டாடா ஏசி போன்ற வாகனங்களை சாலையில் நிறுத்தி கூட்டேரிப்பட்டு 4 முனை சாலையில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வடக்கு மாவட்ட செயலாளர் நிரஞ்சன், மணிகண்டன், ஜீவன், ரமேஷ், தனசேகர், டேவிட், ஹேமச்சந்திரன், சங்கீதா, திவாகர், பிரதாப், தவப்புதல்வன், பார்த்திபன் மற்றும் ஜே.சி.பி. டிரைவர் வெண்ணி,கிரேன் ஆபரேட்டர் பிரபாகரன், டாட்டா ஏ.சி. டிரைவர் சிவச்சந்திரன் உட்பட 15 பேர் மீது மயிலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.