search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணம் செய்து விட்டு வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாத கணவர் மீது மனைவி போலீசில் புகார்
    X

    திருமணம் செய்து விட்டு வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாத கணவர் மீது மனைவி போலீசில் புகார்

    • குப்புராஜூக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனமாக ரூ.2லட்சம் ரொக்கம், 35 பவுன் நகை, ஒரு அபார்ட்மெண்ட் வீடு ஆகியவை கொடுக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.
    • தேவிக்கு தெரியாமல் குப்புராஜ் தனது தாய் ரேவதிக்கு மட்டும் விசா எடுத்து அனுப்பி வைத்து அவரை நண்பர்கள் உதவியுடன் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே அதியமான் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் தேவி (வயது36). இவருக்கும், சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த குப்புராஜ் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

    அப்போது குப்புராஜூக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனமாக ரூ.2லட்சம் ரொக்கம், 35 பவுன் நகை, ஒரு அபார்ட்மெண்ட் வீடு ஆகியவை கொடுக்கப்பட்ட தாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து குப்புராஜூக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் அங்கு விசா பெற்று கொண்டு தனது மனைவி, குழந்தையை அழைத்து சென்றார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவியிடம் குப்புராஜ் தமிழ்நாட்டிற்கு சென்று தனது தாய் ரேவதியை அமெரிக்காவிற்கு அழைத்து வருமாறும், இதற்காக 2 பேருக்கும் மீண்டும் விசா எடுத்து அனுப்பி வைப்பதாகவும் கூறி அங்கிருந்து அவரை தனியாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இதனை நம்பி அவரும் தமிழ்நாட்டிற்கு வந்தார். பின்னர் அவர் தமிழ்நாட்டிற்கு வந்து சில நாட்கள் ஆகியும் குப்புராஜ் விசா எடுத்து அனுப்பி வைக்காமல் இருந்தார்.

    இதற்கிடையே தேவிக்கு தெரியாமல் குப்புராஜ் தனது தாய் ரேவதிக்கு மட்டும் விசா எடுத்து அனுப்பி வைத்து அவரை நண்பர்கள் உதவியுடன் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    இதுகுறித்து தகவலறிந்த தேவி அதிர்ச்சியடைந்தார். உடனே தனது கணவருக்கு தொடர்புக் கொண்டு கேட்டபோது, அவர் தேவிக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார்.

    தேவியுடன் அவரது மகனையும் பேசவிடாமல் தடுத்துள்ளார்.

    இதுகுறித்து தேவி தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் தேவியின் கணவர் குப்புராஜ், அவரது தாய் ரேவதி, தங்ைக உமா (37), தங்கையின் கணவர் பழனிவேல் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×