என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உண்மை எது
வைரல் வீடியோவில் டேன்ஸ் ஆடுவது சித்தராமையாவா?
- கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
- சித்தராமையா நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல்.
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றிருக்கும் சித்தராமையா நடனம் ஆடுவதில் விருப்பம் கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் சித்தராமையா மைசூருவில் உள்ள தனது கிராமத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் திருவிழாவில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, சித்தராமையா நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 38 நொடிகள் ஓடும் வீடியோவில் நடனம் ஆடும் நபர் பார்க்க சித்தராமையா போன்றே காட்சியளிக்கிறார்.
பிரபல கன்னடா மொழி பாடலுக்கு நடனம் ஆடும் நபரை, அங்கு கூடியிருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினர். இதுபற்றிய இணைய தேடல்களில், வீடியோவில் நடனம் ஆடிய நபர் கர்நாடக முதல்வர் சித்தராமையா இல்லை என்று தெரியவந்துள்ளது. இதே வீடியோ கடந்த 2018 ஆண்டிலும் வைரல் ஆனதும் தெரியவந்துள்ளது.