search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.23 கோடி கஞ்சா பறிமுதல்
    X

    விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.23 கோடி கஞ்சா பறிமுதல்

    • பல்வேறு போதை பொருட்கள் கடத்தி வருவது தெரியவந்தது.
    • கஞ்சா சர்வதேச மதிப்பில் 1 கிலோ ரூ.1கோடிக்கு விற்பனையாகிறது.

    பெங்களூர்:

    பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகாவின் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பாங்காக்கில் இருந்து வந்த தாய்லாந்தை சேர்ந்த 3 பேரின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் ஹைட்ரோ போனிக் கஞ்சா 23 கிலோ மற்றும் பல்வேறு போதை பொருட்கள் கடத்தி வருவது தெரியவந்தது. இந்த வகை கஞ்சா சர்வதேச மதிப்பில் 1 கிலோ ரூ.1கோடிக்கு விற்பனையாகிறது.

    பெங்களூருவில் பிடிபட்ட 23 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.23 கோடி ஆகும். இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.

    Next Story
    ×