search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    High Court on elderly couples alimony battle
    X

    80 வயதான கணவரிடம் ஜீவனாம்சம் கோரிய மனைவி.. கலியுகம் வந்துவிட்டது என நீதிபதி கருத்து

    • சொத்து தகராறு ஏற்பட்டதால் 80 வயது கணவனை பிரிந்து மனைவி தனியே வாழ்ந்து வந்தார்.
    • கணவரிடம் இருந்து ஜீவனாம்சமாக ரூ.15,000 தரக்கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார்.

    குஜராத்தில் 2018 ஆம் ஆண்டு முனேஷ் குமார் குப்தா என்ற 80 வயதான ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியருக்கும் அவரது மனைவிக்கும் (76) இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் இருவரும் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், கணவரின் மாத ஓய்வூதியம் 35,000 ரூபாயில் இருந்து ஜீவனாம்சமாக ரூ.15,000 தரக்கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 16-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்று கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார்.

    இன்று அந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சவுரப் ஷியாம் ஷாம்ஷேரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற வழக்குகள் கவலை அளிப்பதாகவும் கலியுகம் வந்து விட்டது போல் உள்ளதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக அந்த குப்தாவின் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி, அடுத்த விசாரணையில் தம்பதியினர் சமரசம் செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×