என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கின
- முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
- திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பிரபல பாடகர்கள் கலந்து கொள்கின்றனர்.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. வித்தியாசமான டிசைனில் உருவான லெஹங்கா உடையுடன், வைர நகைகளை அணிந்துள்ள மணமகள் ராதிகா மெர்ச்சண்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை திருமணமும் அதற்கு முந்தைய சடங்குகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பானி குடும்பத்தில் இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூன்று குழந்தைகளில், மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகள் இஷா ஆகியோர் ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்டது. இந்நிலையில் மற்ற இரு திருமணங்களை விட இத்திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த அந்த அம்பானி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த பிரமாண்ட திருமணத்தில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு மஹாபலேஷ்வரில் இருந்து பார்வையற்ற கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு மெழுகுவர்த்திகள் பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழங்கால கைவினைப் பொருட்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை ஆதரிக்கும் வகையில் இஷா அம்பானி, சுவதேஷ் இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பிரபல பாடகர்கள் கலந்து கொள்கின்றனர். திருமண வீட்டின் உட்புறத்தை ஆடம்பரமாக அலங்கரிப்பதற்கும், உணவு பரிமாறுவதற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரபலமான மற்றும் திறமையான கலைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.