search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தலைவர்கள் கருத்து என்ன?
    X

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தலைவர்கள் கருத்து என்ன?

    • ம.பி.யில் பா.ஜனதா 100 முதல் 123 இடங்களையும், காங்கிரஸ் 102 முதல் 125 இடங்களையும் பெறும் என தெரிய வந்துள்ளது.
    • 86 முதல் 106 இடங்கள் வரை ஆளும் காங்கிரஸ் பெறும் எனவும் பா.ஜனதா 80 முதல் 100 இடங்கள் வரை கைப்பற்றும்

    5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும், தெலுங்கானா, சத்தீஸ்காரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.

    இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்...

    ராஜஸ்தான் மாநில மந்திரி மகோஷ ஜோஷி: முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ராஜஸ்தானில ஆட்சியமைக்கும். அதுபோக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்: மற்ற மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு சிறப்பாக உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சூழ்நிலைய நன்றாக இருக்கிறது. தெலுங்கானாவில் நாங்கள் 80 சதவீத இடங்களை பிடிப்போம். காங்கிரஸ் 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும்.

    பா.ஜனதா சீனியர் தலைவர் சரோஜ் பாண்டே (சத்தீஸ்கர்): பா.ஜனதா ஏராளமான வளர்ச்சியை கொடுத்துள்ளது. நாங்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்து வருகிறமோ, அங்கெல்லாம் ஆட்சி அமைப்போம். அதேபோல் ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம். மோடி மீதான நம்பிக்கை மக்கள் காட்டியுள்ளனர்.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி: இது காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையிலான தேர்தல் அல்ல. 4 கோடி மக்கள் பிஆர்எஸ்-க்கு எதிராக உள்ளனர். இது தெலுங்கானா மக்களின் வெற்றி. முதல் மந்திரிசபை கூட்டத்தில் 6 வாக்குறுதிகளை நிறைவேற்ற அனுமதி பெற்று செயல்படுத்துவோம். நாங்கள் முழு வெற்றி பெறுவோம். இதைத்தான் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

    சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா தலைவர் அருண் சாயோ: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட மாதிரி அளவைக் கொண்டுள்ளன. பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

    ராபர்ட் வதேரா: நான் கருத்துக் கணிப்பை பெரிய அளவில் நம்பவில்லை. நான் உண்மையான முடிவை நம்புகிறவன். நான் கடந்த சில மாதங்களாக ஏராளமான மக்களை சந்தித்தேன். அவர்கள் விரக்தியில் இருந்தனர். குறிப்பாக மத்திய பிரதேசத்தில். ஆட்சியை கவிழ்த்தது தொடர்பான விரக்தி தெரிந்தது.

    பா.ஜனதா எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர்: அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். பா.ஜனதா செய்த பணிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் பிரகாஷ் பாண்டே: கருத்துக் கணிப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால், பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதற்கு காரணம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங்: கருத்துக் கணிப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. நாங்கள் அது குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாது. மத்திய பிரதேசத்தில் 130 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் என்ற உறுதியை என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முதல்வர் சிவ்சராஜ் சிங் சவுகான் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

    பா.ஜனதா எம்.பி. ரதோர் (ராஜஸ்தான்): மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முழு மெஜாரிட்டியுடன் ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சியமைக்கும். கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட பகுதிக்கானது. 3-ந்தேதி முடிவு பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும்.

    Next Story
    ×