என் மலர்
இந்தியா

ராமநகரம் பெயர் மாற்றத்தை எதிர்க்கும் மத்திய அரசு: குமாரசாமியை சாடிய சிவகுமார்
- ராமநகரம் பகுதியை பெங்களூரு தெற்கு என பெயர்மாற்றம் செய்ய சட்டசபை ஒப்புதல் அளித்தது.
- ஆனால் மத்திய அரசு இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தின் ராமநகரம் பகுதியை பெங்களூரு தெற்கு என பெயர்மாற்றம் செய்ய அம்மாநில சட்டசபை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் மத்திய அரசு இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி கே.டி.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம். கோடை தொடங்குவதற்கு முன்பு தண்ணீரை சேமிப்பதாக உறுதிமொழி எடுக்க ஒரு பிரசாரம் செய்ய விரும்புகிறோம்.
நாளை மாலை காவிரி ஆரத்தி எடுப்போம். இது ஒரு அரசு திட்டம். நாங்கள் அரசியலுக்காக அல்ல, வளர்ச்சிக்காக இருக்கிறோம்.
ராமநகரம் பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றப்படும். டெல்லியில் சில அமைச்சர்கள் குறும்பு செய்து வருகின்றனர். சட்டப்பூர்வமாக விஷயங்களை எப்படி கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும் என தெரிவித்தார்.