search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: மணமக்களின் போட்டோ ஷூட்டில் வெடித்த குண்டு- மணப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை
    X

    VIDEO: மணமக்களின் 'போட்டோ ஷூட்'டில் வெடித்த குண்டு- மணப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை

    • எதிர்பாராதவிதமாக புகைகுண்டு ஒன்று புதுப்பெண்ணின் உடலில்பட்டு வெடித்தது.
    • வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஒரேநாளில் 45 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

    கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் விக்கி மற்றும் பியா. காதலர்களான இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக சொந்த ஊரான பெங்களூருவுக்கு வந்திருந்தனர்.

    பெங்களூருவில் உள்ள திறந்தவெளி தோட்டத்தில் திருமணத்துக்கு முந்தைய 'போட்டோ ஷூட்' நடத்தினர். அப்போது வண்ணப்புகை குண்டுகள் வெடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பில் புதுபெண்ணை மணமகன் அலேக்காக தூக்கி கொண்டாடியபோது வண்ணப்புகை குண்டுகள் பல வண்ணங்களில் வெடித்து சிதற தொடங்கின.

    அப்போது எதிர்பாராதவிதமாக புகைகுண்டு ஒன்று புதுப்பெண்ணின் உடலில்பட்டு வெடித்தது. இதனால் அவர் வலியில் துடித்து கதறினார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய உடலின் முகுது மற்றும் இடைப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் அவருடைய தலைமுடியும் எரிந்து கருகி இருந்தது.

    இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஒரேநாளில் 45 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.



    Next Story
    ×