என் மலர்tooltip icon

    இந்தியா

    நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல்- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் டெல்லி ஐகோர்ட் அறிக்கை தாக்கல்
    X

    நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல்- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் டெல்லி ஐகோர்ட் அறிக்கை தாக்கல்

    • சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக்கட்டுகள் எரிந்து நாசமானதாகவும், வீட்டில் மொத்தம் ரூ.37 கோடி அளவில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    • சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும்.

    புதுடெல்லி:

    டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா. அவரது வீட்டில் கடந்த 14-ந்தேதி தீ விபத்தின்போது ஒரு அறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டது. சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக்கட்டுகள் எரிந்து நாசமானதாகவும், வீட்டில் மொத்தம் ரூ.37 கோடி அளவில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து நீதிபதி வர்மா அலாகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த விவகாரத்தில் விரிவான நீதி விசாரணை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு சம்மதித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.கே. உபத்யாய் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும்.

    Next Story
    ×