search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் குழந்தைகள் விளையாட உடும்பு பிடித்து வந்த தந்தை கைது
    X

    ஆந்திராவில் குழந்தைகள் விளையாட உடும்பு பிடித்து வந்த தந்தை கைது

    • கடந்த வாரம் 3 உடும்பகளை பிடித்து வந்து தனது குழந்தைகளிடம் விளையாட கொடுத்தார்.
    • உடும்பை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்து சிரஞ்சீவியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், கலிவிடு அடுத்த பட்டே பள்ளியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் வன விலங்குகளை வேட்டையாடி மாமிசத்தை விற்பனை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் 3 உடும்பகளை பிடித்து வந்து தனது குழந்தைகளிடம் விளையாட கொடுத்தார். குழந்தைகள் உடும்புகளுடன் விளையாடுவதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

    இதனைக் கண்ட கரீம் நகரை சேர்ந்த விலங்குகள் ஆர்வலர் ஒருவர் இது குறித்து வனத்துறையினரிடம் புகார் செய்தார். வேம்பள்ளி வனச்சரகர் பாலசுப்பிரமணியம் உடும்பை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்து சிரஞ்சீவியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×