search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்வில் Fail ஆக்கிவிடுவேன்... மாணவி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்
    X

    தேர்வில் Fail ஆக்கிவிடுவேன்... மாணவி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்

    • மாணவியை ஒரு தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
    • குற்றத்துக்கு உடந்தையாக இருந்த நண்பர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் சபர்கந்தா பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அந்த பள்ளியில் பணியாற்றும் 33 வயது ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த மாணவி கடந்த மாதம் 26-ந்தேதி நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பேசியபோது, பெண் குழந்தையை காப்பாற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி இருந்தார். அவரது பேச்சை பலரும் பாராட்டியதால் அந்த மாணவி பிரபலமானார்.

    இந்நிலையில் கடந்த 7-ந்தேதி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதாக கூறி மாணவியை ஒரு தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். தனது நண்பர் விருந்து கொடுப்பதாகவும், எனவே இதனை யாரிடமும் கூற வேண்டாம் என அந்த மாணவியிடம் கூறி ஓட்டலுக்கு அழைத்து சென்ற அவர் அங்கு மாணவியிடம் அத்துமீறியுள்ளார்.

    இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்ட நிலையில் உன்னை தேர்வில் தோல்வி அடையச் செய்துவிடுவேன் என மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில், ஆசிரியர் மீதும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியரின் நண்பர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×