search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் கள்ளக்காதல் ஜோடி கொலை
    X

    தெலுங்கானாவில் கள்ளக்காதல் ஜோடி கொலை

    • மனைவி காணாமல் போனது குறித்து திவாகர் வனஸ்தலிபுரம் போலீசில் புகார் செய்தார்.
    • தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.

    திருப்பதி:

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் திவாகர். இவரது மனைவி பிந்து (வயது 25). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன், மனைவி இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம், சங்கர் பள்ளிக்கு வந்தனர். திவாகர் பிளம்பர் வேலை செய்து வந்தார்.

    பிந்து வீட்டு வேலைக்கு சென்று வந்த போது அங்கீத் சாகேத் (25) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த திவாகர் சிந்தில் குண்டாவிற்கு வீட்டை மாற்றினார். கடந்த 8-ந் தேதி பிந்து கள்ளக்காதலன் அங்கித் சாகேத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

    கள்ளக்காதல் ஜோடி புப்புலகுடாவில் உள்ள நண்பரின் வீட்டில் 3 நாள் தங்கி இருந்தனர். மனைவி காணாமல் போனது குறித்து திவாகர் வனஸ்தலிபுரம் போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அங்கித் சாகேத்தின் நண்பர் ஒருவர் அவருக்கு போன் செய்து புப்புல குடா அனந்த பத்மநாபசாமி கோவில் அருகே வருமாறு தெரிவித்தார்.

    நண்பர் கூறிய இடத்திற்கு அங்கித் சாகேத் மற்றும் பிந்து ஆகியோர் சென்றனர். அப்போது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து அங்கித் சாகேத் மது அருந்தினார். மது போதை ஏறியதும் நண்பர்களுக்கும், அங்கித் சாகேத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அங்கித் சாகேத்தை தலையில் சரமாரியாக கத்தியால் குத்தியும், முகத்தில் கல்லை போட்டு கொலை செய்தனர். இதனைக் கண்ட பிந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரையும் பிடித்து கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கித் சாகேத் மற்றும் பிந்துவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.

    Next Story
    ×