search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி விவகாரம், உ.பி. வன்முறை- பாராளுமன்றம் 3-வது நாளாக முடக்கம்
    X

    அதானி விவகாரம், உ.பி. வன்முறை- பாராளுமன்றம் 3-வது நாளாக முடக்கம்

    • அதானி விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
    • பல்வேறு பிரச்சனையால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 3-வது நாளாக முடங்கியது.

    புது டெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந் தேதி தொடங்கியது. அதானி மீதான லஞ்ச புகார் தொடர்பாக முதல் நாளே இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. நேற்றும் அதானி விவகாரத்தால் அமளி ஏற்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் முடங்கியது. அதானி மற்றும் உ.பி. வன்முறை தொடர்பாக எதிர்கட்சிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

    மக்களவை கூடியதும் பிரியங்கா, ரவீந்தர் சவான் எம்.பி.யாக பதவியேற்றனர். அதை தொடர்ந்து சமாஜ் வாடி உறுப்பினர்கள் உ.பி. வன்முறை குறித்த விவகாரத்தை கிளப்பினார்கள். அதானி விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் எதிர்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

    மேல் சபையிலும் இதே நிலை நீடித்தது. அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு, மணிப்பூர் மறறும் உ.பி. வன்முறை குறித்து எதிர் கட்சி எம்.பி.க்கள் பிரச்சனையை கிளப்பினார்கள். இதனால் ஏற்பட்ட அமளியால் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

    அதானி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனையால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 3-வது நாளாக முடங்கியது.

    Next Story
    ×