என் மலர்
இந்தியா
பத்ம விருதுகள் அறிவிப்பில் தெலுங்கானாவுக்கு அநீதி- ரேவந்த் ரெட்டி
- தெலுங்கானா மாநிலத்திற்கு 5 பத்ம விருதுகளையாவது வழங்கி இருக்க வேண்டும்.
- 4 கோடி தெலுங்கானா மக்களுக்கு அவமானம்.
திருப்பதி:
இந்தியா முழுவதும் நடிகர் அஜித்குமார் உட்பட 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் 2 பேருக்கு மட்டுமே பத்ம விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் பத்ம விருதுகளுக்கு மாநில அரசு பரிந்துரை செய்த பிரபலங்களின் பெயர்களை பரிசீலனை செய்யவில்லை. 139 பேருக்கு விருதுகள் அறிவித்த மத்திய அரசு தெலுங்கானா மாநிலத்திற்கு 5 பத்ம விருதுகளையாவது வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் 2 பேருக்கு மட்டுமே பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த பிரபலங்களின் பெயர்களை பத்ம விருதுகளுக்கு மத்திய அரசு பரிசீலிக்காதது 4 கோடி தெலுங்கானா மக்களுக்கு அவமானம்.
மேலும் பத்ம விருதுகள் அறிவிப்பில் தெலுங்கானாவுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.