என் மலர்
இந்தியா
கோவில் பூசாரியின் மனைவியை குத்திக்கொன்ற இன்ஸ்டாகிராம் நண்பர்
- இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவர் நண்பராக பழகி வந்தது தெரியவந்தது.
- வாலிபர் பற்றிய அனைத்து விவரங்களையும் போலீசார் சேகரித்து விட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கஜகூட்டம் அருகே உள்ள கடினம்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவரது மனைவி ஆதிரா(வயது30). ராஜீவ் பரணிக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலின் பூசாரியாக இருக்கிறார்.
சம்பவத்தன்று காலை அவர் வழக்கம்போல் கோவிலுக்கு சென்று விட்டார். பகலில் அவரது மனைவி ஆதிரா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்தநிலையில் அவர் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆதிராவுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவர் நண்பராக பழகி வந்தது தெரியவந்தது. மேலும் அந்த வாலிபர் கொலை நடந்த தினத்தில் ஆதிராவின் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார்.
மேலும் அவர் ஆதிராவின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றிருக்கிறார். அது சிராயின்கீழ் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. ஆகவே ஆதிராவை அவரது இன்ஸ்டாகிராம் நண்பர் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
ஆதிராவுடன் பழகிய அந்த வாலிபர் பற்றிய அனைத்து விவரங்களையும் போலீசார் சேகரித்து விட்டனர். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆதிரா பட்டப்பகவில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அக்கம்பக்கத்து வீட்டினர் யாருக்கும் எந்த சத்தமும் கேட்காமல் இருந்திருக்கிறது.
ஆகவே இந்த கொலையில் வேறு நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போல சார் கருதுகின்றனர். அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.