search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமண அழைப்பிதழில் மோடிக்கு வாக்கு கேட்ட விவகாரம்: வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
    X

    திருமண அழைப்பிதழில் மோடிக்கு வாக்கு கேட்ட விவகாரம்: வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

    • திருமண அழைப்பிதழ் மார்ச் மாதம் அச்சிடப்பட்டது.
    • மனுதாரர் தரப்பில் வாதிட்ட வக்கீல் எம்.வினோத் குமார், மோடிக்கு ஓட்டு போட்டால், பரிசு கொடுப்பது போல் மனுதாரர் அழைப்பு கடிதம் அச்சடித்திருந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது திருமண அழைப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடி படத்தை அச்சிட்டு அவருக்கு ஆதரவாக தட்சிண கன்னடா மாவட்டம் சூல்யா பகுதியை சேர்ந்த சிவபிரசாத் என்பவர் ஓட்டு கேட்டார். இது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகார் கூறப்பட்டது. மேலும் சிவபிரசாத் மீது தட்சிண கன்னடா மாவட்டத்தின் சூல்யா சட்டமன்ற தொகுதியின் பறக்கும் படை அதிகாரி சந்தேஷ் வழக்குப் பதிவு செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை புத்தூர் ஜே.எம்.எப்.சி. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவபிரசாத் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்ட வக்கீல் எம்.வினோத் குமார், மோடிக்கு ஓட்டு போட்டால், பரிசு கொடுப்பது போல் மனுதாரர் அழைப்பு கடிதம் அச்சடித்திருந்தார்.

    திருமண அழைப்பிதழ் மார்ச் மாதம் அச்சிடப்பட்டது. மனுதாரர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 16-ந் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அது சட்டவிரோதமானது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து நீதிபதி "அழைப்புக் கடிதம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முன்பே அச்சிடப்பட்டது. எனவே, புத்தூர் ஜே.எம்.எப்.சி. நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது,'' என உத்தரவிட்டார்.

    Next Story
    ×