search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டிய சந்திரசேகர ராவ்
    X

    வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டிய சந்திரசேகர ராவ்

    • 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் அறிவிப்பு
    • சந்திரசேகர ராவ் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார்

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருட இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும், சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி 119 இடங்களில் 115 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளையும் ஆச்சர்யத்திற்குள் ஆழ்த்தும் வகையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நர்சாபுர், நம்பல்லி, கோஷமஹால், ஜன்கயோன் ஆகிய நான்கு இடத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

    வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சந்திரசேகர ராவ், ''நாங்கள் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே இருந்த பட்டியலில் ஏழு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் போட்டியிடுகிறார். அத்துடன் தற்போது கமரெட்டி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த கட்சியை சேர்ந்த கம்பா கோவர்தன் தொடர்ந்து நான்கு முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்களவை தேர்தலில் ஓவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். அந்த கூட்டணி தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிதான், பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. தற்போது, வேட்பாளர்களுக்கான விண்ணபத்தை வினியோகம் செய்துள்ளது. கடந்த 18-ந்தேதி முதல் ஆகஸ்ட் 25-ந்தேதி வரை போட்டியிட விரும்புவோம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம், சிபிஐ ஆகிய நான்கு கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போது பாரத ராஷ்டிய சமிதி) தோற்கடிக்க முயற்சி செய்தன. ஆனால் மகா கூட்டணிக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

    சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஒவைசி கட்சி 7 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

    Next Story
    ×