என் மலர்
இந்தியா

8.5 கிலோ எடை குறைந்த கெஜ்ரிவால்-ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
- ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது.
- ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே கெஜ்ரிவாலின் எடை 8.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. மார்ச் 21 அன்று அமலாக்கத் துறை கைது செய்த போது கெஜ்ரிவாலின் எடை 70 கிலோவாக இருந்தது என்றும், தற்போது அவரது எடை 61.5 கிலோவாக குறைந்துள்ளது என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கெஜ்ரிவாலின் எடை 2½ கிலோ மட்டுமே குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story