search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    train stopped as man slept on track
    X

    வீடியோ: தண்டவாளத்தில் அசந்து தூங்கிய நபர்.. ரெயிலை நிறுத்திய லோகோ பைலட்.. அப்புறம் நடந்த டுவிஸ்ட்..!

    • பலருக்கும் உறக்கம் சார்ந்த விஷயங்களில் ஏராளமான பிரச்சினைகள் இருக்க தான் செய்கிறது.
    • வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    மனிதன் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், உடல் மற்றும் மனதை மீண்டும் புத்துணர்ச்சியூட்ட உறக்கம் மிக மிக முக்கியம். ஆனால், இந்த உறக்கம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலர் படுத்தவுடன் உறங்குவதும், சிலர் எந்நேரமும் விழித்துக் கொண்டே இருப்பதும் என பலருக்கும் உறக்கம் சார்ந்த விஷயங்களில் ஏராளமான பிரச்சினைகள் இருக்க தான் செய்கிறது.

    படுத்ததும் உறங்குபவர்கள், எந்நேரமும் உறங்குபவர்கள், எங்கும் உறங்குபவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். அந்த வகையில், டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் குடை பிடித்தப்படி அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    தண்டவாளத்தில் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டு இருப்பதை பார்த்த லோகோ பைலட் ரெயிலை நிறுத்திவிட்டார். பிறகு ரெயிலை விட்டு கீழே இறங்கி வந்து, உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி அங்கிருந்து விரட்டியடித்து அவர் சென்ற பிறகு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பல லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. பலர் தண்டவாளத்தில் உறங்கிய நபரை வசைபாடியும், பலர் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.


    Next Story
    ×