search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாமில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்
    X

    அசாமில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்

    • பாஜகவில் இணையும் நிகழ்ச்சி பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • அசாம் மாநிலத்தின் பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இணைந்தனர்.

    அசாம் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அங்கிதா தத்தா. இவரை அசாம் மாநில காங்கிரஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டினார்.

    இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக அங்கிதா தத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரசின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

    இதனால் அதிருப்தியில் இருந்த அங்கிதா தத்தா பாரதீய ஜனதா கட்சியில் இணையபோவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்தன.

    இந்நிலையில் இன்று மாலை பாஜகவில் இணையும் நிகழ்ச்சி கவுகாத்தி பாசிஸ்தாவில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அசாமில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, மாநிலத்தின் பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இணைந்தனர்.

    பாஜகவில் இணைந்த முக்கிய தலைவர்கள் வருமாறு:-

    அசாம் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அங்கிதா தத்தா, கும்தாய் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பிஸ்மிதா கோகோய், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் (ஏஏஎஸ்யு) முன்னாள் தலைவர் தீபங்க குமார் நாத் மற்றும் ஏஏஎஸ்யு முன்னாள் துணைத் தலைவர் பிரகாஷ் தாஸ்

    திலீப் பால், புருஷோதம் டோலி, மிலன்ஜோதி ராய், ஹிமான் பர்மன், ஜிதுமோனி புயான், தேபாஜித் பதிர், பிரசாந்தா ஹசாரிகா, மனோரஞ்சன் நாத், போனி பதக், ஷியாமல் நாராயண் தேப் மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஞான சக்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இன்று பாஜகவில் இணைந்து உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் பாபேஷ் கலிதா, அசாம் கேபினட் அமைச்சர்கள் ஜெயந்தா மல்லபருவா, பிஜூஷ் ஹசாரிகா, எம்எல்ஏக்கள் திகந்தா கலிதா, மனாப் தேகா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

    Next Story
    ×