என் மலர்tooltip icon

    இந்தியா

    செல்லப்பிராணியைத் தேடி கண்டுபிடித்த வாலிபர்
    X

    செல்லப்பிராணியைத் தேடி கண்டுபிடித்த வாலிபர்

    • நகரின் பல்வேறு இடங்களிலும் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்தார்.
    • பாசப்பிணைப்பை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலாகியது.

    டெல்லியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்லப்பிராணியாக நாயை வளர்த்து வந்தார். சார்லி என்று பெயரிடப்பட்ட அந்த நாய் திடீரென காணாமல் போனது. பாசமாக வளர்த்து வந்த சார்லி காணாமல் போனதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனை கண்டுபிடிப்பதற்காக நகரின் பல்வேறு இடங்களிலும் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்தார்.

    விடாமுயற்சி தோற்று போகாது என்பது போல அந்த விளம்பரம் மூலம் சார்லி உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக புறப்பட்ட அந்த வாலிபர் சார்லி இருக்கும் இடத்தை அடைந்தார். அங்கு அவரை பார்த்த சார்லி ஓடோடி வந்து வாலிபரை கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியது. இந்த பாசப்பிணைப்பை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலாகியது.

    Next Story
    ×