என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
உத்தரகாண்டில் டிரம்ஸ் அடித்து மகிழ்ந்த பிரதமர் மோடி
- கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்களின் கைவினைப் பொருள்களை கண்டு களித்தார் பிரதமர் மோடி.
- உள்ளூர் பிரமுகர்கள், ராணுவ வீரர்களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ.4,194 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், 2 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். உத்தரகாண்ட் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்களின் கைவினைப் பொருள்களை கண்டு களித்த பிரதமர் மோடி, அவர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்து மகிழ்ந்தார்.
மேலும் உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.
அதன்பின், பித்தோரகர் பகுதிக்குச் செல்லும் பிரதமர் மோடி, ரூ.4,194 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும் சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.