search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய தங்க நகைக்கடன் வழங்க ஐஐஎஃப்எல் நிறுவனத்திற்கு ஆர்பிஐ தடை
    X

    புதிய தங்க நகைக்கடன் வழங்க ஐஐஎஃப்எல் நிறுவனத்திற்கு ஆர்பிஐ தடை

    • தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது
    • தங்க நகைகளின் தூய்மையை பரிசோதிப்பதில் தவறுகள் உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்தது

    1995ல் நிர்மல் ஜெயின் (Nirmal Jain) என்பவர் தொடங்கிய நிதி வர்த்தக சேவை நிறுவனம்,"ஐஐஎஃப்எல்" (India Infoline Finance Limited).

    மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஐஎஃப்எல் (IIFL), இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் நிதி வர்த்தக சேவை ஆற்றி வருகிறது.

    பல்வேறு நிதி சேவைகளில் ஈடுபட்டு வரும் ஐஐஎஃப்எல், தங்க நகைக்கடன் வழங்குவதிலும் முன்னணியில் உள்ள வங்கி-சாரா நிதி நிறுவனமாக (NBFC) உள்ளது.


    இந்நிலையில், இந்தியாவில் வங்கி சேவைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களை கண்காணிக்கும் மத்திய ரிசர்வ் வங்கி (RBI), ஐஐஎஃப்எல் தங்க நகைக்கடன் வழங்குவதை தடை செய்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

    இதுவரை வினியோகிக்கப்பட்ட தங்க நகைக்கடன் தொடர்பான வசூல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடர தடையேதுமில்லை.

    ஆர் பி ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

    தங்க நகைக்கடன் வழங்குவதில் பல முறைகேடுகள் இருந்தது.

    தங்க ஆபரணங்களின் தூய்மையை (purity) பரிசோதிப்பதில் கடன் வழங்கும் போது ஒரு நடைமுறையையும், தவணைகளை கட்ட தவறியவர்களின் நகைகளை ஏலம் விடும் போது வேறொரு நடைமுறையையும் கடைபிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வங்கி-சாரா நிதி நிறுவனங்களுக்கு உள்ள கடன் வழங்கும் எல்லையை கடந்து கடன் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

    நகைகளை ஏலம் விடுவதில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை.


    வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பிடித்தம் செய்யப்படும் சேவைக்கட்டணங்களில் சீரான கட்டண அமைப்போ வெளிப்படைத்தன்மையோ இல்லை.

    நிறுவனத்தின் கணக்குகளை ஆர்பிஐ-யின் சிறப்பு தணிக்கை குழு தணிக்கை செய்து முடித்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    "ஆர்பிஐ விதித்துள்ள சட்டதிட்டங்களின்படி தங்க நகைக்கடன் வழங்க அனைத்து நிர்வாக மற்றும் செயலாக்க நடைமுறைகளும் மாற்றி அமைக்கப்படுகிறது" என நிறுவனர் நிர்மல் ஜெயின் தெரிவித்தார்.

    Next Story
    ×