என் மலர்
இந்தியா

இது அதுல்ல.. கடந்தாண்டு வினாத்தாளை இந்தாண்டும் வழங்கிய விவகாரம் - 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
- 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
- வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு தேதியை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வணிக நிர்வாகத் தேர்வு வினாத்தாள் அப்படியே நகல் எடுக்கப்பட்டு இந்தாண்டு நடைபெற்ற தேர்விலும் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் பள்ளி கல்வி வாரியம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story