என் மலர்
இந்தியா
X
எலும்பை கடித்து சாப்பிடும் ஒட்டகச்சிவிங்கி
ByMaalaimalar16 Jun 2023 3:39 PM IST (Updated: 16 Jun 2023 3:39 PM IST)
- மான் ஒன்று பாம்பை கடித்து தின்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
- பொதுவாக ஒட்டகசிவிங்கிகள் புல்வெளிகளிலும், திறந்த காடுகளிலும் வாழ்கின்றன.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பார்கள். அதாவது அசைவ உண்ணிகள் சைவ உணவுகளை சாப்பிடாது என்பதை குறிப்பிடுவதற்கு அவ்வாறு கூறுவார்கள். அதே போல சைவ உண்ணிகளும் இலைகள், தாவரங்கள் போன்றவற்றையே சாப்படும். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மான் ஒன்று பாம்பை கடித்து தின்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் வன அதிகாரியான சுஷாந்த்நந்தா டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒட்டகச்சிவிங்கி ஒன்று எலும்பை மென்று தின்பது போன்று காட்சிகள் உள்ளது. பொதுவாக ஒட்டகசிவிங்கிகள் புல்வெளிகளிலும், திறந்த காடுகளிலும் வாழ்கின்றன. அவை இலைகள், விதைகள், பழங்களை உண்கின்றன. இந்நிலையில் ஒட்டகசிவிங்கி எலும்பு துண்டை மெல்லும் வீடியோவை பார்த்த வலைதள வாசிகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Next Story
×
X