என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![நடுரோட்டில் ஸ்கூட்டரில் சாகசம் செய்த வாலிபர்- வீடியோ வைரலானதால் அதிரடி கைது நடுரோட்டில் ஸ்கூட்டரில் சாகசம் செய்த வாலிபர்- வீடியோ வைரலானதால் அதிரடி கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/06/29/1906910-gujarat.webp)
நடுரோட்டில் ஸ்கூட்டரில் சாகசம் செய்த வாலிபர்- வீடியோ வைரலானதால் அதிரடி கைது
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வீடியோ காட்சிகள் வைரலானதை தொடர்ந்து அகமதாபாத் போலீசார் ஸ்கூட்டர் எண்ணை வைத்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர்.
- வாலிபர் தனது சாகச பயணத்தின் போது ஹெல்மெட் கூட அணிந்திருக்கவில்லை.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் பரபரப்பான சிந்து சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் நடுரோட்டில் சாகசம் செய்வது போன்று வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதில், சாலையில் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வாலிபர் திடீரென அதன் மீது ஏறி நின்று பயணம் செய்வது போன்றும், ஆபத்தான முறையில் சென்றதால் முன்னால் சென்ற கார் மீது மோதுவது போலவும் காட்சிகள் இருந்தன.
மேலும் ஸ்கூட்டர், கார் மீது மோத இருந்த நேரத்தில் அந்த வாலிபர் ஹேண்டில்பாரை பிடித்து மீண்டும் இருக்கைக்கு வந்து ஸ்கூட்டரை ஓட்டுவது போன்றும் இருந்த காட்சிகள் இணைய பயனர்களை பதைபதைக்க வைத்தது. இந்த காட்சிகள் வைரலானதை தொடர்ந்து அகமதாபாத் போலீசார் ஸ்கூட்டர் எண்ணை வைத்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர். அவர் தனது சாகச பயணத்தின் போது ஹெல்மெட் கூட அணிந்திருக்கவில்லை. அதற்கும் சேர்த்து அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.