என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் அரிய வகை புலாசா மீன் ரூ.26 ஆயிரத்துக்கு விற்பனை
    X

    ஆந்திராவில் அரிய வகை புலாசா மீன் ரூ.26 ஆயிரத்துக்கு விற்பனை

    • வலையில் 2 கிலோ எடையுள்ள அரிய வகை மீனான புலாசா வகை மீன் சிக்கியது.
    • மீனை நாகலட்சுமி என்ற பெண் ரூ.19 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஏலாமை சேர்ந்தவர் வானுமதி ஆதிநாராயணா. மீனவரான இவர் நேற்று மாலை அங்குள்ள ஆற்றில் மீன் பிடிக்க சென்றார்.

    அப்போது அவரது வலையில் 2 கிலோ எடையுள்ள அரிய வகை மீனான புலாசா வகை மீன் சிக்கியது. அதனை மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து ஏலம் விட்டார்.

    அந்த மீனை நாகலட்சுமி என்ற பெண் ரூ.19 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். பின்னர் அந்த மீனை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் ரூ.26 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றார்.

    இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×