என் மலர்
இந்தியா
X
தென் ஆப்பிரிக்க லீக் கிரிக்கெட்- ஈஸ்டர்ன் கேப் அணி 3-வது வெற்றி
BySuresh K Jangir20 Jan 2023 11:11 AM IST
- முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெடடுக்கு 127 ரன் எடுத்தது.
- இன்று நடக்கும் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ்- பிரிடோரியோ கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
6 அணிகள் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்க லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் பர்ல் ராயல்ஸ் அணியை ஈஸ்டர்ன் கேப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய ஈஸ்டர்ன் கேப் அணி 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து வென்றது.
இன்று நடக்கும் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ்- பிரிடோரியோ கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.
Next Story
×
X