search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மகனுக்கு வைர வியாபாரியின் மகளுடன் திருமண நிச்சயதார்த்தம்
    X

    ஜீத்அதானி-திவா ஜெய்மின்ஷா.

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மகனுக்கு வைர வியாபாரியின் மகளுடன் திருமண நிச்சயதார்த்தம்

    • ஜீத் அதானி பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மற்றும் அப்ளைய்டு சயின்ஸ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர் ஆவார்.
    • நிச்சயதார்த்தத்தின் போது ஜீத்அதானி-திவா ஜெய்மின்ஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

    அகமதாபாத்:

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத்அதானி.

    இவருக்கும் பிரபல வைர வியாபாரியான ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஜெய்மின்ஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 12-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று உள்ளது.

    இதில் இரு குடும்பத்தினரின் உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர்.

    நிச்சயதார்த்தத்தின் போது ஜீத்அதானி-திவா ஜெய்மின்ஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் திவா ஜெய்மின்ஷா எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹங்கா அணிந்திருந்தார். ஜீத்அதானி வெள்ளை நிற குர்தாவில் அசத்தலாக காட்சி அளித்தார்.

    ஜீத் அதானி பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மற்றும் அப்ளைய்டு சயின்ஸ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர் ஆவார்.

    இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதானி குழும பணியில் சேர்ந்து தற்போது அதானி குழுமத்தில் நிதி பிரிவின் துணைத்தலைவராக உள்ளார்.

    அதானி ஏர்போர்ட்ஸ் வணிகத்தையும், அதானி டிஜிட்டல் லேப் இணைந்து அதானி குழும வணிகங்களின் அனைத்து வாடிக்கையாளர்களையும் இணைக்கும் வகையில் ஒரு செயலி உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்திற்கு ஜீத் அதானி தலைமை தாங்குகிறார்.

    Next Story
    ×