என் மலர்
இந்தியா
தான் உருவாக்கிய ஆன்லைன் விளையாட்டை யாரும் பார்க்காததால் விரக்தி- ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை
- படிப்பில் மிகவும் திறமையான தீனா தன்னுடைய முயற்சியால் ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி யூடியூப் சேனலில் பதிவிட்டார்.
- அவர் உருவாக்கிய ஆன்லைன் விளையாட்டை ஒரு சிலர் மட்டுமே விரும்பி விளையாடினர்.
திருப்பதி:
ஐதராபாத்தில், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (வயது 23). இவர் அங்குள்ள அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.டி.யில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
படிப்பில் மிகவும் திறமையான தீனா தன்னுடைய முயற்சியால் ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி யூடியூப் சேனலில் பதிவிட்டார்.
அவர் உருவாக்கிய ஆன்லைன் விளையாட்டை ஒரு சிலர் மட்டுமே விரும்பி விளையாடினர். அவர் எதிர்பார்த்த அளவிற்கு அவரது ஆன்லைன் விளையாட்டுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனால் தீனா கடந்த சில நாட்களாக விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் 5-வது மாடிக்குச் சென்ற தீனா அங்கிருந்து கீழே குதித்தார். இதில் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.
ஐதராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீனா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.