என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி நாளை அசாம் பயணம்
- வருகிற 4-ந்தேதி கானாபரா கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
- ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நாளை (3-ந்தேதி) அசாம் மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு வருகிற 4-ந்தேதி கானாபரா கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி வருகை குறித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அசாமில் உள்ள மக்களுடன் ஒரு நாளை கழிக்க வேண்டும் என்ற எங்கள் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதை பெரிய கவுரவமாக கருதி நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். பிரதமர் மோடி ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் பல நலத்திட்ட பணிகளை மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.
Next Story